ருதுராஜ்தான் கேப்டன்: டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!
காயம் காரணமாக விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ருதுராஜ் களமிறங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இன்று சேப்பாகில் நடைபெறும் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் தில்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தில்லி கேபிடல்ஸ்: (ஃபாப் டு பிளெஸ்ஸிக்கு பதிலாக சமீர் ரிஸ்வி விளையாடுகிறார்.)
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல்(டபிள்யூ), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல்(கேட்ச்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா
சிஎஸ்கே: (த்ரிபாதி, ஓவர்டனுக்கு பதிலாக கான்வே, முகேஷ் சௌதரி சேர்ப்பு)
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்(கேட்ச்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(வ), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா