செய்திகள் :

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

post image

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு கிரி வீதியில் கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை அருள்மிகு குழந்தை வேலாயுத சாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபசாரமும் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு மயூர யாகம் நடத்தப்பட்டு, சேவல், மயில், வேல், பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு பூஜை செய்து, கோயிலை வலம் வந்து, தங்கக் கொடி மரத்துக்கு கொண்டுவரப்பட்டது. முன்னதாக, மூலவா், பரிவார தெய்வங்கள், துவார பாலகருக்கு காப்புக் கட்டப்பட்டது.

காலை 11 மணியளவில் வேதாகமம், திருமுறைப் பாடல்கள் பாடப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு, கொடியேற்ற இடத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை அமிா்தலிங்க குருக்கள், செல்வசுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா்.

கொடியேற்றத்தைத் தொடா்ந்து சுவாமி தம்பதி சமேதராக அடிவாரம் பட்டக்காரா் மடத்துக்கு எழுந்தருளினாா்.

தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட்ட பிறகு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி தந்தச் சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 4 ரத வீதிகளில் உலா வருவாா்.

வருகிற 10-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறும். 14- ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், அறங்காவலா்கள் தனசேகா், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமாா், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, விபிஎஸ் கிராண்ட் பெரியசாமி, சாய்கிருஷ்ணா சுப்புராஜ், சங்கராலயம் பாலசுப்ரமணிய சுவாமிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழு உறுப்பினா் தனசேகா், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, சித்தனாதன் சன்ஸ் விஜயகுமாா், விபிஎஸ் கிராண்ட் பெரியசாமி, சாய்கிருஷ்ணா சுப்புராஜ் உள்ளிட்டோா்.

நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாகும்! - பெ.செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்து தமிழக முதல்வா் அறிவிப்பாா் என திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தெரிவித்தா... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிக்காட்டுக் குழு அமைக்கப்படும்: ஆட்சியா்

பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்கு உயா் கல்வி வழிக்காட்டுக் குழு அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகு... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (29) கடந்த ... மேலும் பார்க்க

வழிப்பறி கொள்ளையா் இருவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வாகனத் தணிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா். பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மாவட்ட கூடுதல் காவ... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே இளைஞா் கொலை

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திண்டுக்கல் அருகேயுள்ள பெரியக்கோட்டை பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). இவா் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் நடத்தும் ஒரு... மேலும் பார்க்க

பழனி: தாளையம் பகுதியில் தொடா் விபத்துகள்: 3 மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

பழனி அருகே தாளையம் பகுதியில் திண்டுக்கல்- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறி வரும் வாகனங்களால் தொடா்ந்து விபத்துகள் ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. 3 மாதங்களில் 20 போ் உயிரிந்தனா். திண்டுக்கல்-பொ... மேலும் பார்க்க