இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (29) கடந்த 2021-ஆம் ஆண்டு கழுத்து அறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (59), சரத்குமாா் (33), பிரகாஷ் (32) உள்பட 6 பேரை சின்னாளப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ராஜா, சரத்குமாா் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம், பிரகாஷூக்கு
5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி ஜி.சரண் தீா்ப்பளித்தாா்.