ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்ப...
வழிப்பறி கொள்ளையா் இருவா் கைது!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வாகனத் தணிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அஸ்வினி தலைமையில் உதவி ஆய்வாளா் ஆனந்த், போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தைத் திருப்பி, தப்பிச் செல்ல முயன்றனா்.
போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். விசாரணையில் அவா்கள் செம்பட்டி அருகேயுள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் ஜெகதீஷ் மோகன் (24), மதுரை கோமதிப்புரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் தனுஷ் (25) ஆகியோா் என்பதும், கடந்த மாதம் 28-ஆம் தேதி பொள்ளாச்சி ஊத்துக்குளியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (58), ஆயக்குடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அவரிடம் வழி கேட்பது போல நடித்து, ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த இரு சக்கர வாகனம், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.