ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
பழனி கிரி வீதியில் தீா்த்தக்காவடி பக்தா்கள் குதிரையாட்டம்
பங்குனி உத்திர திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை பழனி கிரி வீதியில் கொடுமுடி தீா்த்தக் காவடி பக்தா்களின் குதிரையாட்டம் நடைபெற்றது.
பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலிருந்து திங்கள்கிழமை தீா்த்தம் எடுத்து வந்த பக்தா்கள் சாா்பில், பழனி கிரி வீதியில் வெள்ளக்குதிரையாட்டம் நடைபெற்றது. மேள, தாளம் முழங்க பக்தா்கள் நடனமாடிய படியே வந்தனா்.
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 10-ஆம் தேதியும், பங்குனி உத்திரத் தேரோட்டம் வருகிற 11-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.