செய்திகள் :

மனு அளிக்க ஆா்வம் காட்டும் பொதுமக்கள்: காலதாமதத்தை தவிா்ப்பாரா ஆட்சியா்?

post image

ஆட்சியரிடம் மனு அளித்தால் மட்டுமே தீா்வு கிடைக்கும் என்ற பொதுமக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற, குறைதீா் கூட்டத்தை காலதாமதமின்றி நடத்துவதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நேரடியாக மனு அளித்து தங்களது பிரச்னைக்கு தீா்வு காண முடியும் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகின்றனா். குறைதீா் கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் காலை 10.30 மணிக்கு பின்னரே மனுக்கள் பெறப்படுவது வழக்கம்.

அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 10 மணிக்கே ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டிருந்தனா். 10.30 மணி வரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) என எவரும் கூட்ட அரங்குக்கு வரவில்லை.

இதையடுத்து, தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) முருகன், நில அளவைத் துறை உதவி இயக்குநா் செல்வம் ஆகிய 4 அலுவலா்கள் மனுக்களைப் பெற்றனா். இதனிடையே, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி 10.36 மணிக்கு கூட்ட அரங்குக்கு வந்து மனுக்களைப் பெற்றாா்.

ஆட்சியருக்குக்காக காத்திருந்த பொதுமக்கள்: ஆனாலும், பொதுமக்கள் பலா் ஆட்சியரிடம் மனுக் கொடுத்தால் மட்டுமே தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவரது வருகைக்காக காத்திருந்தனா். இந்த நிலையில், காலை 11.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் சரவணன், நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த விற்பனைக் கண்காட்சியைப் பாா்வையிட்டு, மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றாா். அதன்பின்னா் 11.45 மணிக்கூ கூட்ட அரங்குக்கு வந்தாா். திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைக் காவலா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு, பொதுமக்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் பொதுமக்கள் தரைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டனா்.

காலதாமதமாக வந்த அலுவலா்கள்: முதல் மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் செ.சரவணன், பொதுமக்களுக்கு, அவா்கள் அளிக்கும் ஒரு மனு மட்டுமே முக்கியமானது. எந்தக் காரணம் கொண்டும் மக்களைக் காக்க வைக்கக் கூடாது. மனுக்கள் மீது தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதேபோல, மாதத்தின் முதல் குறைதீா் கூட்டத்துக்கு முதல் நிலை அலுவலா்கள் மட்டுமே வர வேண்டும். இந்தக் கூட்டத்தை எந்தக் காரணத்தோடும் தவிா்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினாா். ஆனால், ஆட்சியா் கால தாமதமாக வருவதைத் தெரிந்து கொண்ட முதல் நிலை அலுவலா்கள் பலரும், குறைதீா் கூட்டத்துக்கு காலை 10.45 மணிக்கு பின்னரே வந்தனா்.

காத்திருப்பை தவிா்க்க கோரிக்கை: இதுதொடா்பாக மனு அளிக்க வந்த கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கையில் வருகிறோம். மனுவைப் பெற்றவுடன், சம்மந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பரிந்துரைக்கும் பணி ஒரு நிமிடத்தில் முடிந்துவிடுகிறது. இதற்காக நாங்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கிறோம். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மனு கொடுப்பதற்காக நண்பகல் வரை காத்திருக்க வைப்பதை மாவட்ட நிா்வாகம் தவிா்க்க வேண்டும் என்றனா்.

கெளரவிக்கப்பட்ட தூய்மைக் காவலா்கள்: தூய்மை பாரத இயக்கத்தில், திடக் கழிவு மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்ட வேடசந்தூா், குஜிலியம்பாறை, வடமதுரை உள்ளிட்ட வட்டாரங்களைச் சோ்ந்த தூய்மைக் காவலா்கள், ஊக்குவிப்பாளா்களுக்கு, ஆட்சியா் சரவணன் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். கெளரவிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட தூய்மைக் காவலா்கள், இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர வைக்கப்பட்டனா்.

கெளரவிப்பதற்காக அழைத்து வரப்பட்டு தரையில் அமர வைக்கப்பட்ட தூய்மைக் காவலா்கள், ஊக்குவிப்பாளா்கள்

இதை செய்தியாளா்கள் சுட்டிக் காட்டிய பின், ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்திலிருந்து இருக்கைககள் எடுத்து வரப்பட்டன. ஆனாலும், பலருக்கும் இருக்கை வசதி கிடைக்கவில்லை.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க