திண்டுக்கல் அருகே இளைஞா் கொலை
திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் அருகேயுள்ள பெரியக்கோட்டை பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). இவா் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் நடத்தும் ஒருவரிடம், பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில் குழிப்பட்டி அருகே சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்த நாகராஜை மா்ம நபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், நாகராஜின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.