வறுமை ஒழிப்பு மூலம் உத்தரப் பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர் யோகி
வறுமை ஒழிப்பதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்றுவோம் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி தெரிவித்தார்.
மகாராஜ்கஞ்சில் உள்ள ரோஹின் தடுப்பணை திறப்பு விழாவிற்காக வருகைதந்த ஆதித்யநாத் பேசியதாவது,
ரூ.654 மதிப்பிலான 629 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு யோகி அடிக்கல் நாட்டினார். "ஒரு மாவட்டம் ஒரு மாஃபியாவை" ஊக்குவித்ததாகவும், பாஜக அரசு அதை "ஒரு மாவட்டம் ஒரு மருத்துவக் கல்லூரி" என்று மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், வறுமை ஒழிப்பு மூலம் ஒரு வளமான மாநிலமாக நிறுவப்படும் என்றும்,
வறுமை இல்லாத இலக்கை அடைவதன் மூலம் நாட்டின் முதன்மை பொருளாதார மாநிலமாக உ.பி.யை மாற்றுவோம்.
உத்தரப் பிரதேசம் இனி நலிந்த மாநிலமாக இருக்காது. அதேபோன்று மகாராஜ்கஞ்ச் இனி பின்தங்கிய மாவட்டம் அல்ல என்றும் அவர் கூறினார்.
கடந்த 1980-களில் ஏழ்மையான மாநிலங்களில் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருந்ததாக மக்கள்தொகை ஆய்வாளர் ஆஷிஷ் போஸ் தெரிவித்தார். ஆனால் அந்த நிலை தற்போது மாறியுள்ளது என்று அவர் கூறினார்.