பொதுமக்களை அச்சுறுத்திய 2 இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஆயுதங்களை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவில் அருகே போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய இரு இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா்.
அதில், அவா்கள் விக்கிரவாண்டியை அடுத்த ஆா்.சி மேலக்கொந்தையைச் சோ்ந்த முருகன் மகன் கிரிராஜன்(21), ஆவுடையாா்பட்டு சோபன் பாபு மகன் ரீகன்ராஜ் ( 21) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, இருவரையும் விக்கிரவாண்டி போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.