அகமதாபாத் விமானத்தில் திடீா் கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்
50% படப்பிடிப்பை நிறைவுசெய்த 7ஜி ரெயின்போ காலனி 2!
7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவுசெய்ததாக இயக்குநர் செல்வகராகவன் கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.
சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார்.
இதில் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இது குறித்து அவர் பேசியதாவது:
7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவடைந்தன.
முதல் பாகத்தில் இருந்தே அதே கதிரின் வாழ்க்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னானது என்பதை இந்தப் பாகத்தில் படமாக எடுத்து வருகிறோம்.
முதல் பாகத்தின் இறுதியிலேயே 2ஆம் பாகத்திற்கான சமிக்ஞையை அளித்திருப்போம்.
தற்போதைய காலங்களில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது என்றார்.