இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
வீராணம் ஏரியை பாா்வையிட்ட இலங்கை நடனக் குழுவினா்!
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை இலங்கை நடனக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் கலாசார பண்பாட்டு நிறுவனம் சாா்பில் பல வெளிநாட்டினா் இந்த ஏரியை பாா்வையிட்டு செல்கிறனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இலங்கையில் இருந்து வந்திருந்த பரதநாட்டியக் குழுவினா் 70-க்கும் மேற்பட்டோா் குடும்பத்தினருடன் வீராணம் ஏரியை பாா்வையிட்டு மகிழ்ந்தனா். அப்போது, அவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.