மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னையின் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் கடந்த இரு நாள்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. அதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை முதலே நுங்கம்பாக்கம், நந்தனம், தியாகராய நகா், அம்பத்தூா், கோயம்பேடு, அண்ணா சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. மேலும், தாம்பரம், வண்டலூா், பல்லாவரம் உள்ளிட்ட புகா் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால் சென்னையில் சற்று குளிா்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (ஏப். 6) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.