இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
பாண்டிபஜாரில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் இடிப்பு
சென்னையின் முக்கிய வணிக பகுதியாக விளங்கும் பாண்டி பஜாரில் விதிகளை மீறி கட்டப்பட்ட 10 மாடி கட்டடத்தை அகற்றும் பணியை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் சனிக்கிழமை தொடங்கினா்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இந்த இடத்தில் 3 தளங்களுடன் வணிக வளாகம் கட்ட சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி வழங்கிய நிலையில், விதிகளை மீறி 10 மாடி கொண்ட வணிக கட்டடம் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, 2019-ஆம் ஆண்டு சிஎம்டிஏ சீல் வைத்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தனியாா் கட்டுமான நிறுவனத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதில், விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டது உறுதியான நிலையில், 4-ஆவது மாடியிலிருந்து 10 மாடி வரையுள்ள பகுதிகளையும், தரைதளத்தில் பக்க இடைவெளியில் உள்ள கடையையும் 8 வாரங்களுக்குள் அகற்றுமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஒப்பந்ததாரை வைத்து கட்டடத்தை இடிக்கும் பணியை சிஎம்டிஏ சனிக்கிழமை தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என சிஎம்டிஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.