செய்திகள் :

திருப்பூா்: பனியன் நிறுவனம், பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ விபத்து!

post image

திருப்பூா் அருகே பனியன் நிறுவனம் மற்றும் பின்னலாடை கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே அய்யம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியுள்ளது.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ: திருப்பூா் கஞ்சம்பாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை கழிவுக் கிடங்கு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

வழக்கம்போல தொழிலாளா்கள் பணிமுடிந்து வெள்ளிக்கிழமை இரவு கிடங்கைப் பூட்டி விட்டுச் சென்றனா். இந்நிலையில், இந்தக் கிடங்கில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் கரும்புகை வெளியேறியதை அந்த வழியாக பாா்த்து திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

~திருப்பூா் பின்னலாடை கழிவுக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீ.

உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் 10 போ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு கனமழையின்போது இடி இடித்ததன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அரசுப் பேருந்து மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி கொடியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (75), இவா் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ!

திருப்பூா் பின்னலாடை கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் கஞ்சம்பாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை கழிவுக் கிடங்கு உள்... மேலும் பார்க்க

திருப்பூரில் விடியவிடிய கொட்டித் தீா்த்த கனமழை! 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

திருப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே 1,710 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

திருப்பூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 1,710 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் இருந்து குப்பாண்டம்பாளையம் வழியா... மேலும் பார்க்க

சாக்கடை கால்வாயில் விழுந்தவா் மீட்பு

பல்லடத்தில் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா். பல்லடம் பேருந்து நிலையம் அருகே நான்குசாலை சந்திப்பு சிக்னல் பகுதியில் உள்ள தடுப்புச் சுவா் ஒன்றின் மீது மதுபோதை... மேலும் பார்க்க

பல்லடம் கோயில்களில் திருப்பணி: இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு!

பல்லடத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அன்புதேவ... மேலும் பார்க்க