உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!
திருப்பூா் அருகே 1,710 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!
திருப்பூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 1,710 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் இருந்து குப்பாண்டம்பாளையம் வழியாக ரேஷன் அரசி கடத்திச் செல்லப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் காவல் ஆய்வாளா் ராஜகுமாா், உதவி ஆய்வாளா்கள் குப்புராஜ், பிரியதா்ஷினி ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த ராக்கியாபாளையத்தைச் சோ்ந்த முத்தையன் (34) என்பவரைக் கைது செய்தனா். இவரிடமிருந்து 1,710 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.