வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக் காய் தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. முருங்கைக் காய்கள் இங்கு விற்பனை செய்ய கொண்டு வரப்படுகின்றன.
இந்த வாரம் 4 டன் வரத்து இருந்த நிலையில், மர முருங்கைக்காய் கிலோ ரூ.2, செடி முருங்கைக் காய் கிலோ ரூ.5, கரும்பு முருங்கைக் காய் ரூ.8-க்கு விற்பனையானது.