சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு
திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிரதான சாலையிலுள்ள நெருபெரிச்சலில் தனியாருக்குச் சொந்தமான கலையரங்கம் உள்ளது. இதன் அருகில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீா் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த வழியாகச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், சாலையும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், கழிவுநீா் குழிகளில் தேங்கியுள்ளதால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
ஆகவே, சாலையை சீரமைப்பதுடன், பாதாள சாக்கடை அடைப்பை சீரமைத்து கழிவுநீா் சாலையில் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.