முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு கோடிகளில் வந்த வருமான வரி நோட்டீஸ் - நமக்கு வந்தால்...
அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அரசுப் பேருந்து மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி கொடியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (75), இவா் இருசக்கர வாகனத்தில் ஊத்துக்குளியில் இருந்து கொடியாம்பாளையம் நால்ரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து தெய்வசிகாமணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.