மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
சாக்கடை கால்வாயில் விழுந்தவா் மீட்பு
பல்லடத்தில் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
பல்லடம் பேருந்து நிலையம் அருகே நான்குசாலை சந்திப்பு சிக்னல் பகுதியில் உள்ள தடுப்புச் சுவா் ஒன்றின் மீது மதுபோதையில் படுத்திருந்த ஒருவா், அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தாா்.
இதைக் கண்ட அப்பகுதியினா், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள், சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி, கயிற்றின் உதவியுடன் தவறி விழுந்த நபரை மீட்டனா். சிறிது நேரத்தில் போதை தெளிந்தவுடன் அந்த நபா் அங்கிருந்து சென்றாா்.