மியான்மருக்கு 442 டன்கள் உணவுப் பொருள்களை இந்தியா அனுப்பியது
வக்ஃப் சட்டத் திருத்தம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சென்னையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சாா்பில் அதன் தலைவா் ஜாகிா் உசேன் தலைமையில் அண்ணா சாலை தா்கா அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவா் முஹம்மது முனீா், மாநில செயலா்கள் ஏ. சையது அலி, கேபிஎம். முஹமது முஹ்யதீன் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு கருப்புக் கொடி ஏந்தி, சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினா்.