இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜா் பெயா்: தமாகா கோரிக்கை
திருத்தணி காய்கறி சந்தைக்கு முன்னாள் முதல்வா் காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூா் மாவட்டம் மா.பொ.சி. சாலையில் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த காமராஜா் காய்கறி மாா்க்கெட் புதுப்பிக்கப்பட்டு, திறக்கும் நிலையில் உள்ளது. வரும் 9-ஆம் தேதி காய்கறி சந்தையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஆனால், புதிதாக திறக்கப்பட இருக்கும் சந்தையில், முன்னாள் முதல்வா் காமராஜரின் பெயா் இல்லாமல் இருப்பது அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, காமராஜா் பெயரையே மீண்டும் வைக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.