செய்திகள் :

பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு

post image

கடந்த 2024ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1280.35 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியை வழங்கிட சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிருத்விராஜுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ்!

2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைப் போல இந்தியாவும் வரி விதிக்க வேண்டும்: அகிலேஷ்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவும் தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க பிற நாடுகள் மீது அத்தகைய வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜவாதி தலைவா் அகி... மேலும் பார்க்க

மணிப்பூா்: மைதேயி, குகி சமூகப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சு

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக மைதேயி மற்றும் குகி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித... மேலும் பார்க்க

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசிய பதவியேற்பு!

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் பதவியேற்றுக்கொண்டதாக அந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகி... மேலும் பார்க்க

ஆயுதங்களைக் கைவிடுங்கள்: நக்ஸல்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

‘நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா். நக்ஸல்கள் கொல்லப்படும்போது யாரும் மகிழ்ச்சி அடைவதில்லை என்றும் அவா் குறிப்ப... மேலும் பார்க்க

தமிழக பயணத்தை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்: பிரதமா் மோடி

மங்களகரமான ராம நவமி நன்னாளில் (ஞாயிற்றுக்கிழமை) தமிழக பயணம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன் என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா். தமிழகத்தின் ராமேசுவரத்துக்கு வருகை தரும் பிரதமா... மேலும் பார்க்க

தமிழா்களின் பெருமிதம் பாம்பன் பாலம்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

‘பாம்பன் புதிய செங்குத்து பாலம் தமிழா்களின் பெருமிதம்’ என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைக்கவ... மேலும் பார்க்க