உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில்...
பிளாஸ்டிக் ஸ்டூல்களில் நடுவே இருக்கும் துளை - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் தெரியுமா?
பொதுவாக கடைகளில் வீடுகளில் பிளாஸ்டிக் ஸ்டூல்கள், சேர்கள் பார்த்திருப்போம். அந்த ஸ்டூல்களில் நடுவில் துளை இருப்பதை கவனத்திருப்போம். இது அழகுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஸ்டூல்களில், நாற்காலிகளில் இருக்கும் துளைக்கு பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளன என்பது குறித்து தெரியுமா?
பிரபலமான பிராண்டுகளாக இருந்தாலும் சரி உள்ளூர் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி சில உற்பத்தி பொருட்களில் அறிவியல் விதிகளை பின்பற்றுவர். அதன்படி தான் ஸ்டூல்களில் இருக்கும் துளைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் இருக்கும் துளை அதன் நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்படுகிறது.

ஸ்டூல்களின் மீது அமரும் போது, சமநிலை இல்லாமல் உடைந்து கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த துளைகள் போடப்படுகின்றன.
இந்த துளைகள் பெரும்பாலும் வட்ட வடிவில் தான் இருக்கின்றன. சதுரமாகவோ அல்லது மற்ற வடிவத்திலோ இருந்தால், நாம் அமரும் போது அழுத்தம் அதிகரிக்கலாம்.
இதனால் இந்த ஸ்டூல்களில் விரிசல்கள் விழலாம். வட்டவடிவ துளைகள் இருந்தால் நாம் அமரும் போது பேலன்ஸ் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டூல்களை நாம் ஒன்றன் மீது ஒன்றாக தான் அடுக்குவோம். நடுவில் இந்த துளைகள் இல்லையென்றால், பிரிப்பது கடினமாகிவிடும். மேலும் ஒரு ஸ்டூலுக்கும், அடுத்த ஸ்டூலுக்கும் இடையில் காற்றழுத்தம் அதிகரித்துவிடும். இந்த துளைகள் இருந்தால், ஸ்டூகளை எளிதாக பிரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.