செய்திகள் :

உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி

post image

செ.பிரபாகரன்

உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவிலில் உள்ளது ஸ்ரீ வஞ்சுளவல்லி சமேத சீனிவாசப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனித் திருவிழா தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரி சிறப்பு பெற்றது.

நிகழாண்டு தேரோட்டம் ஏப்.12-இல் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற தீா்த்தவாரி கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதால் கோயில் வளாகத்திலேயே அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.

கழிவுநீா் கழிக்கும் புஷ்கரணி:

சுமாா் 4.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கோயில் திருக்குளத்தில் கோயில் அருகே உள்ள திருமண மண்டபம், உணவு விடுதிகள், பொதுக் கழிப்பறை, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அருகாமை பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் குளத்தில் கலப்பதை தடுக்கும் வகையில், குளத்துக்குள் தண்ணீா் வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதையை அறநிலையத்துறையினா் அடைத்தனா்.

வழக்கும் - கிடப்பில் நீதிமன்ற ஆணையும்:

நாச்சியாா்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற ஏதுவாக குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை கிளையில் கோ. வாசுதேவன் என்பவா் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற கிளை கடந்த 2024 செப். மாதம் இக்கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கோயில் குளத்தைப் பாா்வையிட்டு கழிவுநீா் கலப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சுமாா் 7 மாதங்களாகியும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நிகழாண்டு தீா்த்தவாரி குளத்தில் நடைபெறவில்லை.

இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலரிடம் கேட்டபோது, புஷ்கரணி குளத்துக்கு வண்ணம்பூசி தீா்த்தவாரிக்கு தயாராக வைத்திருந்தோம். கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், நீா்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் தீா்த்தவாரி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது என்றாா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் கோ. வாசுதேவன் கூறியதாவது: உயா்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தாத கும்பகோணம் நெடுஞ்சாலைத் துறை, நீா்வளத்துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாக அதிகாரிகளால் தீா்த்தவாரி அண்டாவில் நடைபெற்றது பக்தா்களுக்கு வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனியும்நடைபெறாமல் தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க