அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?
இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.
'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்டி ட்டே டேனா, அப்பத் ட்டி யா, அப்பத் ட்டி ட்டே டேக்கு' என்ற வரி, தாய்லாந்து நாட்டின் நாட்டுப்புறப் பாடலின் அங்கமாக இடம்பெற்ற சொற்றொடராகும்.

தற்போது, அது உலக அளவில் பிரபலமாகித் தனக்கெனப் பல தரப்பு ரசிகர்களை உருவாக்கியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் இசைக் கலைஞரான நொய் சிர்னிம், இந்த வரியை முதன்முதலாக 'டோங் பாவே க்ரஹ்மம்' என்ற பாடலில் நகைச்சுவையாகப் பயன்படுத்தி இருந்தார்.
ஆனால், இந்த பாடலின் வரிகள் மற்றும் இசையைப் படைத்தவர் சக் பக்னம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலால் பிரபலமாகிய நொய் சிர்னிம், 2010 இல் வெளிவந்த 'லுவாங் ஃபை டெங் 3' என அழைக்கப்படும் 'ஹோலி மேன் 3' திரைப்படத்தில் இந்த பாடலைப் பாடியிருந்தார்.
அவர் பாடிய 'அணன் ட்ட பத் சயே, அபத் ட்ட ட்டே டேனா... ' என்ற வரி, 'அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா.. ' எனத் தமிழில் ஒலிப்பது போலவே இருந்தது.

தாய்லாந்திலும், தெற்காசிய நாடுகளிலும் 'ஹோலி மேன் 3' திரைப்படம் பிரபலமானதைத் தொடர்ந்து, 'டோங் பாவே க்ரஹ்மம்' பாடல் யூடியூப் மற்றும் பிற ஓடிடி தளங்களில் 'லுக் துங்க் காமெடி' ஆல்பத்தின் அங்கமாக நவம்பர் 2014 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
2019 இல், பல மொழிகளில் பாடும் தனது பாடும் திறனை மேடையில் வெளிப்படுத்திய 11 வயதான நாட்டுப்புற மேடை கலைஞர் நிக்கென் சாலின்டரி, 'அணன் ட்ட பத் சயே' வரியை ஏற்கனவே பயன்படுத்தி பாடியிருந்தார்.
'ப்ளாக்பிங்க்' கேர்ள் குரூப்பின் பாடகியான பாடகர் ரோஸ், அக்டோபர் 2024 இல் ப்ரூணோ மார்ஸ் என்ற பாடகரோடு இணைந்து 'ஏபிடி' என்ற தலைப்புடைய பாடலை வெளியிட்டார்.
நிக்கென் சாலின்டரி பாடிய 'அணன் ட்ட பத் சயே' பாடல் 'தாய்லாந்து ஏபிடி' என்ற தலைப்பில் மீண்டும் பிரபலமாகியது.

'அணன் ட்ட பத் சயே, அபத் ட்டி ட்டே டேனா...' என்ற பாடல் வரிகள், 'அண்ணண பாத்தியா, அப்பாட்ட கேட்டியா...' எனத் தமிழில் கேட்பது போன்ற சிறப்போடு இருப்பதால், தமிழகத்தில் தனக்கெனத் தனி ரசிகர்களைக் கொண்டுள்ளது தாய்லாந்து நாட்டின் இந்த நாட்டுப்புறப் பாடல்.
- மு. சுபஸ்ரீ.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...