தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்
தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.
கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பின்னர் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட அவரது மகன் அதிக் மருத்துவரின் மரண அறிவிப்பை ஏற்க முடியாமல் வேறு ஒரு இதய சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அந்த மருத்துவர்களும் லைக் அகமதுவின் மரணத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். அவரது உடலை ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற போது மகன் அதனை பின்தொடர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
துக்கம் தாளாமல் பின்தொடர்ந்து வந்த மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே சரிந்து விழுந்திருக்கிறார்.
உள்ளூர் வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தந்தை மகன் இருவரின் இறுதிச்சடங்களும் ஒன்றாக நடைபெற்றது. லைக் அகமதுவின் இரண்டு மகன்களில் இளையவரான அதிக், தனது தந்தையுடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குடும்பத்தினர்கள் மத்தியில் கிராமவாசிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
