DC vs LSG: "அஷுதோஷ் அல்ல இவர்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தார்" - தோல்வி...
``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜபுத் வெளிநாட்டில் கப்பல் வேலைக்குச் சென்றபோது முஸ்கானும், சாஹிலும் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர். முஸ்கானின் கணவர் செளரப் ரஜபுத் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அவருக்கு தூக்கமாத்திரை கொடுத்து அதன் பிறகு குத்திக்கொலை செய்தனர்.

பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி சிமெண்ட் தொட்டியில் வைத்துவிட்டு இருவரும் சிம்லா மற்றும் மனாலிக்கு சுற்றுலா சென்றனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு மீரட் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரையும் சிறைக்கு கொண்டு வந்தபோது சிறையில் தங்களை ஒன்றாக ஒரே அறையில் அடைக்கவேண்டும் என்று சாஹில் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டான். ஆனால் அப்படி ஒரே சிறையில் அடைக்க வாய்ப்பு இல்லை என்றும். ஆண் கைதிகளுக்கு தனியாகவும், பெண்கைதிகளுக்கு தனியாகவும் சிறை இருக்கிறது என்று தெரிவித்துவிட்டனர். இதனால் பக்கத்து பக்கத்து அறையிலாவது அடைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இரு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இருவரும் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இருவரும் சாப்பிட மறுத்தனர். அதன் பிறகு சிறை ஊழியர்கள் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தனர்.
இருவரும் தனி அறையில் 10 நாள்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மற்ற கைதிகளோடு இருக்க அனுமதிக்கப்படுவர் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறையில் இருவரும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

சாஹில் தனக்கு கஞ்சா வேண்டும் என்று கேட்டு சாப்பிடாமல் அடம்பிடிக்கிறான். இருவரும் சிறைக்கு வெளியில் இருந்தபோது அடிக்கடி போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்திருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
முஸ்கானும் தனக்கு போதை ஊசி போடும்படி சிறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் சாப்பிடவும் இல்லை. போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக மருந்து கொடுத்திருந்தால் இது போன்ற செயல்கள் இருக்கும் என்றும், அடுத்த 10 நாள்களில் அவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள் என்று மீரட் சிறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
