செய்திகள் :

வரலாற்றுச் சிறப்பு மிக்க மும்பை பங்களாவை ரூ.276 கோடிக்கு வாங்கிய அம்பானி உறவினர் - யார் இவர்?

post image

மும்பையில் சொத்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தென்மும்பை, பாந்த்ரா, அந்தேரி போன்ற சில பகுதியில் வீடுகளின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

மும்பையின் தென்பகுதியில் உள்ள நெபன்சீ ரோட்டில் இருக்கும் லட்சுமி நிவாஸ் என்ற பங்களா மிகவும் அதிக பட்சமாக ரூ.276 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

இந்த பங்களா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுதந்திர போராட்டத்தோடும் இப்பங்களா தொடர்பு கொண்டிருக்கிறது. சுதந்திரப்போராட்ட காலத்தில் அதாவது 1940-ம் ஆண்டுகளில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஜெய்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா போன்ற தலைவர்கள் இப்பங்களாவில்தான் பதுங்கி இருந்தனர். அவர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தி விட்டு இப்பங்களாவில் வந்து பதுங்கிக்கொள்வது வழக்கம்.

மும்பை பங்களாவை விலைக்கு வாங்கிய அம்பானி உறவினர்
லட்சுமி நிவாஸ்

அதோடு சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்தி வந்த ஆஷாத் ஹிந்த் ரேடியோவும் இங்கிருந்துதான் ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

அந்த அளவுக்கு புகழ்பெற்ற இப்பங்களாவை இப்போது அம்பானி குடும்பத்தோடு தொடர்புடைய நபர் விலைக்கு வாங்கி இருக்கிறார். அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமான உறவினரான நிகில் மெஷ்வானியின் மனைவி எலினா நிகில் மெஷ்வானி ரூ.276 கோடிக்கு விலைக்கு வாங்கி இருக்கிறார்.

மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சொத்தாக கருதப்படும் இந்த பங்களா இரண்டு மாடிகளை கொண்டது ஆகும். 19891 சதுர அடி கொண்ட இந்த பங்களா ஒரு சதுர அடி ரூ.1.38 லட்சத்திற்கு விற்பனையாகி இருக்கிறது. இதனை வாங்க முத்திரை தீர்வையாக 16.56 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சொத்தை வாங்கிய நிகில், திருபாய் அம்பானியின் சகோதரி திரிலோசனாவின் மகன் ராசிக்லால் மெஷ்வானியின் மகனாவார்.

திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த போது அதில் ராசிக்லால் மெஷ்வானியும் இயக்குனராக இருந்தார். 1986ம் ஆண்டு நிகில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தில் விளையாட்டு பிரிவில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

மும்பை பங்களாவை விலைக்கு வாங்கிய அம்பானி உறவினர்
லட்சுமி நிவாஸ்

நிகிலும், அவரது சகோதரர் ஹிதால் மெஷ்வானியும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இருவரும் ஆண்டுக்கு ரூ.25 கோடி அளவுக்கு சம்பளம் வாங்குகின்றனர்.

லட்சுமி நிவாஸ் கட்டிடம் 1904-ம் ஆண்டு பார்ஸி குடும்பத்தால் கட்டப்பட்டது ஆகும். அதன் பிறகு 1917-ம் ஆண்டு கபாடியா குடும்பம் இந்த சொத்த ரூ.1.20 லட்சத்திற்கு வாங்கியது. தற்போது அந்த சொத்தை கபாடியா குடும்பத்தை சேர்ந்த 15 பேர் சேர்ந்து ரூ.276 கோடிக்கு எழுதிக்கொடுத்திருக்கின்றனர். 120 ஆண்டுகள் பழமையான இந்த சொத்து ரஷ்ய தூதரகத்திற்கு எதிரில் இருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Wolfdog: 'ஓநாயுடன் கலப்பு' - ரூ.50 கோடிக்கு அரிய வகை நாயை வாங்கிய பெங்களூரு நபர்!

உலகம் முழுவதுமே மனிதர்களிடம் பிரபலமான செல்லப்பிராணியாக நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதன் மேல் அதன் உரிமையாளர்கள் கொண்டிருக்கும் அன்பும், ஒரு நல்ல நாய்க்காக அவர்கள் செய்யும் விஷயங்களும் ஆச்சர்யப்படுத்த... மேலும் பார்க்க

39 மனைவிகள், 94 குழந்தைகள்; `உலகின் மிகப்பெரிய குடும்பம்' இதுதான்!

உலகின் மிகப்பெரிய குடும்பமாக மிசோரம் இல் உள்ள ஒரு குடும்பம் அடையாளம் பெற்றுள்ளது. சியோனா சனா என்ற நபர் 39 முறை திருமணம் செய்து கொண்டு, 94 குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 33 பேர ... மேலும் பார்க்க

MrBeast: பள்ளிக் குழந்தைகளுக்கு சொந்த செலவில் காலை உணவு வழங்கும் யூடியூபர், என்ன சொல்கிறார்?

மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், அமெரிக்காவின் கேன்சஸ் பகுதியில் வசித்து வருகிறார். 2012-ல் Mr Beast யூடியூப் சேனலை தொடங்கி, 2017-ல் அதிக சந்தாதாரர்கள் கொண்டு மிகப்பெரிய... மேலும் பார்க்க

``சட்ட விரோதமக குடியேறும் பங்களாதேஷ் பிரஜைகள்; நாடு கடத்துவதில் சிக்கல்.." - உள்துறை இணையமைச்சர்

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வருபவர்கள் வேலை தேடி மும்பைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அது போன்று சட்டவிரோதமாக வருபவர்களுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை... மேலும் பார்க்க

``முற்பிறவியில் பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜியாக...'' - பாஜக எம்.பி., பேச்சால் புது சர்ச்சை

மகாராஷ்டிரா அரசியலில் இப்போது சத்ரபதி சிவாஜி மற்றும் ஔரங்கசீப் கல்லறை பிரச்னை பிரதானமாக இருந்து வருகிறது. இது பாராளுமன்றம் வரை சென்றுள்ளது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி.பிரதாப் புரோஹித் பேசுகையில், ... மேலும் பார்க்க

பரவிய வதந்தி: வாகனங்களுக்கு தீவைப்பு, கலவரம்; 144 தடையுத்தரவு... நாக்பூரில் என்ன நடந்தது?

மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் இருக்கிறது. அக்கல்லறையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுந்துள்ளது. ஆளும் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்ச... மேலும் பார்க்க