செய்திகள் :

``முற்பிறவியில் பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜியாக...'' - பாஜக எம்.பி., பேச்சால் புது சர்ச்சை

post image

மகாராஷ்டிரா அரசியலில் இப்போது சத்ரபதி சிவாஜி மற்றும் ஔரங்கசீப் கல்லறை பிரச்னை பிரதானமாக இருந்து வருகிறது. இது பாராளுமன்றம் வரை சென்றுள்ளது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி.பிரதாப் புரோஹித் பேசுகையில், ''முந்தைய பிறவியில் பிரதமர் நரேந்திர மோடி மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியாக இருந்துள்ளார். துறவி ஒருவருடன் கலந்துரையாடிய போது அவர் இதனை தன்னிடம் தெரிவித்தார். பிரதமர் மோடி உண்மையில் சிவாஜி மகாராஜ் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல மறு அவதாரம் எடுத்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மும்பை காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், இவர்கள் சத்ரபதி சிவாஜியை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடுவதன் மூலம் சத்ரபதி சிவாஜியை அவமதித்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், "இது போன்ற வெட்கமில்லாத பாஜக போலிகளை கட்டுப்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் ஒப்பிடுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

இது தொடர்பான செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர் தனது பதிவில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் சரித்திரம் அரசியல்மயமாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து, 'நரேந்திர மோடி தனது முந்தைய ஜென்மத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாக இருந்தார் என்று எழுதுவது சிவாஜி மகாராஜுக்கு அவமானம் இல்லையா? அவர் எந்தக் கட்சியின் அடையாளமும் கிடையாது. அவர் சுயராஜ்யத்தின் நிறுவனர். வீரம், தியாகம் மற்றும் சித்தாந்தத்தை அரசியலுடன் இணைப்பது அவர்களின் மகத்துவத்தை குறைத்துவிடாதா?' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வரலாற்றுத் தலைவர்களுடன் நரேந்திர மோடியை இதற்கு முன்பும் பல முறை ஒப்பிட்டுள்ளனர். 2020-ம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் ஜெய் பகவான் கோயல் பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு இன்றைய காலத்து சத்ரபதி சிவாஜி என்று குறிப்பிட்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். 2014-ம் ஆண்டு மெளரிய பேரரசர் அசோகருடன் நரேந்திர மோடியை பா.ஜ.கவினர் ஒப்பிட்டனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

பரவிய வதந்தி: வாகனங்களுக்கு தீவைப்பு, கலவரம்; 144 தடையுத்தரவு... நாக்பூரில் என்ன நடந்தது?

மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் இருக்கிறது. அக்கல்லறையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுந்துள்ளது. ஆளும் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்ச... மேலும் பார்க்க

`ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தும் விஷ்வ இந்து பரிஷத்...' - அரசியல் தலைவர்கள் விமர்சனம்..!

மகாராஷ்டிராவில் அரசியலில் சமீப காலமாக மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதுவும் சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வை... மேலும் பார்க்க

Pakistan: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீது தாக்குதல்; கூட்டாளி படுகொலை..!

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 100-க்கும் அதிமானோர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடைய... மேலும் பார்க்க

மாணவர்கள் படிக்காததால் `50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர்... அதிர்ச்சி சம்பவம்

``மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாது. மாணவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாத நிலையில், சரியாக படிக்காத மாணவர்களை தோல்வி அடையச்செய்யவும் முடியவில்லை. எனவே மாணவர... மேலும் பார்க்க

மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல் - என்ன நடந்தது?

சீனாவின் மிகப்பெரிய உணவகங்களின் ஒன்றான ஹைடிலாவ் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானதை எடுத்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் உ... மேலும் பார்க்க

Roatan Island: `மரணத்தை தடுக்க ஊசி' உலக பணக்காரர்களை ஈர்க்கும் மர்ம தீவின் பின்னணி என்ன?

மர்மத்தீவு ஒன்றில் மரணத்தை தடுக்கும் ஊசி போடப்படுவதாகவும் அதனை உலகின் பணக்காரர்கள் வந்து செலுத்தி கொள்வதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மரணம் என்பது இயற்கையான ஒன்று என்பதை யாராலும் மறுக்க ம... மேலும் பார்க்க