இந்த வார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை #VikatanPhotoCards
Pakistan: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீது தாக்குதல்; கூட்டாளி படுகொலை..!
மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 100-க்கும் அதிமானோர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் உள்பட முக்கிய குற்றவாளிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கின்றனர்.

இதில் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் ஜீலம் மாவட்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார். ஹபீஸ் சயீத் தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்நேரம் மர்ம நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆரம்பத்தில் ஹபீஸ் சயீத் உறவினர் நதீம் மற்றும் அபு கத்தால் இறந்ததாகவும், ஹபீஸ் சயீத் காயம் அடைந்ததாகவும் செய்தி வெளியானது. ஆனால் இத்தாக்குதலில் ஹபீஸ் சயீத்தும் இறந்துவிட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
இச்செய்தி பாகிஸ்தான் முழுவதும் காட்டுதீயாக பரவி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான சமாத் யாகுப் கூறுகையில்,'' ஹபீஸ் சயீத் மகனிடம் இது குறித்து பேசினேன். அவர் தனது தந்தை பாதுகாப்பாக இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது''என்றார்.

ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பை மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது. லஷ்கர் அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்து இருப்பதால் ஜமாத்-உத்-தாவா என்ற புதிய அமைப்பை தொடங்கி ஹபீஸ் சயீத் நடத்தி வந்தார். சர்வதேச நாடுகளின் நெருக்கடி இருந்த போதிலும் தொடர்ந்து ஹபீஸ் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தார்.
ஆனால் தாக்குதலில் ஹபீஸ் நெருங்கிய கூட்டாளி அபு கத்தால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அபு கத்தாலும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபராகவே இருந்தான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டில் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத கும்பல் தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks