செய்திகள் :

`ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தும் விஷ்வ இந்து பரிஷத்...' - அரசியல் தலைவர்கள் விமர்சனம்..!

post image

மகாராஷ்டிராவில் அரசியலில் சமீப காலமாக மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதுவும் சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாவா என்ற இந்தி திரைப்படம் வெளியான பிறகு ஔரங்கசீப் கல்லறையை இடிக்கவேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்திருக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்து அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து கல்லறை இருக்கும் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிந்த்

இது குறித்து மகாராஷ்டிரா மற்றும் கோவா விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் கோவிந்த்ஜி செனடே கூறுகையில்,''ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான எங்களது இயக்கம் படிப்படியாக மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனு கொடுத்தல், போராட்டம் நடத்துதல், கொடும்பாவி எரித்தல், பொதுக்கூட்டம், விழிப்புணர்வு முகாம் என்று படிப்படியாக இருக்கும். இறுதியாகத்தான் ஔரங்கசீப் கல்லறையை முற்றுகையிடுவோம்'' என்று தெரிவித்தார்.

இன்று இந்து அமைப்புகள் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற கோரி மாநில அரசிடம் மனு கொடுக்க இருக்கின்றனர். அதில் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் மற்றும் கரசேவகர்களை ஒன்று திரட்டி முற்றுகையிடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவோம் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட இருப்பதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில்,''மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். சாம்பாஜி மகாராஜாவை ஔரங்கசீப் சித்ரவதை செய்தார். எனவே ஔரங்கசீப்பை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அவர் மகாராஷ்டிராவின் எதிரி. துரோகி. அப்படி இருக்கும்போது ஔரங்கசீப் கல்லறை ஏன் மகாராஷ்டிராவில் இருக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில்,'' இது ஒன்றும் அரசியல் கட்சி கிடையாது. வரலாற்று நிகழ்வு. இதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. இதனை அது தொடர்பான வல்லுனர்களிடம் விட்டுவிடவேண்டும். இது வரலாற்று தொடர்பானது என்பதால் அது பற்றி வரலாற்று நிபுணர்கள்தான் பேசவேண்டும்''என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜய் இது குறித்து கூறுகையில், ''வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தளத்திற்கு இப்போது செய்வதற்கு எதுவும் இல்லை. மகாராஷ்டிர மக்கள் நிம்மதியாக வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை குறைக்க விரும்புகிறார்கள். ஔரங்கசீப் மகாராஷ்டிராவில் 27 ஆண்டுகள் இருந்த போது மகாராஷ்டிராவிற்கு எதுவும் செய்யவில்லை. இப்போது அவரது கல்லறையை அகற்றிவிட்டால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அதுல் லோண்டேயும் மாநிலத்தில் பதட்டமான நிலை இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே சத்ரபதி சிவாஜியின் சந்ததியில் வந்தவராக கருதப்படும் பா.ஜ.க எம்.பி உதயன் ராஜே போஸ்லே, சாம்பாஜி நகர் மாவட்டத்தில் இருக்கும் ஔரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேசமயம் `ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிராவில் இருக்கவேண்டும். ஔரங்கசீப் மகாராஷ்டிராவில் புதைக்கப்பட்டுள்ளான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்' என்று உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த அர்விந்த் சாவந்த் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சியின் கருத்து கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு ஔரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.அபு ஆஸ்மி சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் இன்று இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Pakistan: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீது தாக்குதல்; கூட்டாளி படுகொலை..!

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 100-க்கும் அதிமானோர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடைய... மேலும் பார்க்க

மாணவர்கள் படிக்காததால் `50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர்... அதிர்ச்சி சம்பவம்

``மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாது. மாணவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாத நிலையில், சரியாக படிக்காத மாணவர்களை தோல்வி அடையச்செய்யவும் முடியவில்லை. எனவே மாணவர... மேலும் பார்க்க

மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல் - என்ன நடந்தது?

சீனாவின் மிகப்பெரிய உணவகங்களின் ஒன்றான ஹைடிலாவ் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானதை எடுத்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் உ... மேலும் பார்க்க

Roatan Island: `மரணத்தை தடுக்க ஊசி' உலக பணக்காரர்களை ஈர்க்கும் மர்ம தீவின் பின்னணி என்ன?

மர்மத்தீவு ஒன்றில் மரணத்தை தடுக்கும் ஊசி போடப்படுவதாகவும் அதனை உலகின் பணக்காரர்கள் வந்து செலுத்தி கொள்வதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மரணம் என்பது இயற்கையான ஒன்று என்பதை யாராலும் மறுக்க ம... மேலும் பார்க்க

Train Hijack: 'அப்பாவுக்காக; விளம்பரத்துக்காக' - இந்தியாவில் நடந்த சில ரயில் கடத்தல்களின் பின்னணி

கடந்த இரண்டு நாள்களாக பாகிஸ்தான், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கவனம் பெற்ற சம்பவங்களில் ஒன்று பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தி... மேலும் பார்க்க

X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நேற்று மதியம் முதலே எக்ஸ் தளம் மிகவும் மெதுவாகத் தான் வேலை செய்து வருகிறது. இதுக்குறித்து ப்ளூ டிக் கொண்ட டாஜ் டிசைனர் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில், "முதலில் DOGE-க்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. ப... மேலும் பார்க்க