X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்க் சொல்லும் காரணம்
நேற்று மதியம் முதலே எக்ஸ் தளம் மிகவும் மெதுவாகத் தான் வேலை செய்து வருகிறது.
இதுக்குறித்து ப்ளூ டிக் கொண்ட டாஜ் டிசைனர் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில், "முதலில் DOGE-க்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், டெஸ்லா கடைகள் தாக்கப்பட்டன. இப்போது எக்ஸ் மெதுவாக வேலை செய்கிறது. இது எக்ஸ் மீதான தாக்குதலாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது" என்று பதிவிடப்பட்டிருந்தது.
இந்தப் பதிவிற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், "எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது.

இந்த மாதிரியான தாக்குதல் தினமும் நடக்கும் தான். ஆனால், இப்போது நடந்துள்ள தாக்குதலில் அதிக வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தத் தாக்குதலை, கட்டமைக்கப்பட்ட பெரிய குழு செய்திருக்கலாம். அல்லது ஒரு நாடு செய்திருக்கலாம் அல்லது இரண்டும் இணைந்து கூட நடத்தி இருக்கலாம். அது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவு இந்திய நேரப்படி நேற்று இரவு 10.55-க்கும், அமெரிக்க நேரப்படி மார்ச் 10-ம் தேதி பகல் 12 மணியளவில் பதிவிடப்பட்டுள்ளது.