சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
Chhaava: தங்க புதையலை தேடி மொகலாய மன்னன் கோட்டையில் குழி தோண்டிய மக்கள்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்!
சமீபத்தில் நடிகர் விக்கி கெளஷல் நடித்து வெளி வந்த சாவா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் தியேட்டரில் திரையிட்டபோது சாம்பாஜி மகாராஜாவாக வேடமணிந்து குதிரையில் தியேட்டருக்குள் வந்த சம்பங்களும் நடந்திருக்கிறது. அதோடு சாம்பாஜி மகாராஜாவிற்கு ஆதரவாக தியேட்டரில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இப்போது சாவா படத்தை பார்த்துவிட்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மொகலாய மன்னர்கள் புதைத்து வைத்திருக்கும் புதையலை தேடி புறப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புர்கன்பூர் என்ற இடத்தில் இருக்கும் மொகலாயர்கள் கட்டிய ஆசிர்கர் கோட்டையில் தங்கத்தை மொகலாய மன்னர்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருப்பார்கள் என்று கருதி கிராம மக்கள் கோட்டையைச் சுற்றி புதையலை தேட ஆரம்பித்தனர். அவர்கள் மாலை 7 மணிக்கு குழி தோண்ட ஆரம்பித்தனர்.

சிலர் தங்கத்தை தேட மெட்டல் டிடெக்டரையும் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்தனர். இருட்டாகிவிட்ட நிலையில் டார்ச் லைட்டை அடித்துக்கொண்டு ஏராளமானோர் தொடர்ந்து குழி தோண்டினர்.
சாவா படத்தை பார்த்துவிட்டு ஆசிர்கர் கோட்டையில் தங்கத்தை மொகலாயர்கள் புதைத்து வைத்திருப்பதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டதை நம்பிக் மக்கள் மெட்டல் டிடெக்டருடன் ஆசிர்கர் தோண்டுவதாக பத்திரிகையாளர் காசிப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிகாலை 3 மணி வரை அவர்கள் புதையலை தேடி மண்ணை தோண்டிக்கொண்டிருந்தனர். இது குறித்து யாரோ போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரை கண்டதும் கிராம மக்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். பத்திரிகையாளர் காசிப் ட்விட்டர் பக்கத்தில் மக்கள் புதையலை வெட்டி எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டதும் அந்த வீடியோ வைரலானது. அதனை 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆசிர்கர் கோட்டை மொகலாயர்களோடு நெருங்கிய தொடர்புடையது ஆகும். இக்கோட்டையில் ஒளரங்கசீப் தனது புதையலை மறைத்து வைத்திருப்பதாக தகவல் வெளியானதால் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது.