குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
கோடியில் பரிசளித்து மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... எங்கே, ஏன் தெரியுமா?
மாமியாரின் 50-ஆவது பிறந்த நாளை மருமகள் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ ரங்கநாயகி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
மாமனார், மாமியார், மருமகள் மகன் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சுரேஷின் தாயார் பவானிக்கு ஐம்பதாவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று மருமகள் தான் செய்திருக்கிறார்.

அவரை வாசலில் வரவேற்பது முதல் நிகழ்ச்சி கொண்டாட்டம் வரை அனைத்திலும் மருமகள் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மாமியாருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.
விலை உயர்ந்த பட்டுப்புடவை 28 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், ரொக்கம் என எல்லாம் சேர்த்து ஒரு கோடி மதிப்புள்ள பரிசு பொருள்களை மாமியாருக்கு மருமகள் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
வாழ்த்துகள்..!