செய்திகள் :

"தம்பி விஜய் திமுக குறித்து கூறியுள்ளது தான் எங்களது நிலைப்பாடும்" - தமிழிசை கூற வருவது என்ன?

post image

"நாடாளுமன்றத் தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது, திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்" என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

ஒரு மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது

மதுரை வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை அழிக்க நினைப்பது போல ஒரு மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது. திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் தமிழில் அடிப்படைக் கல்வியைக் கொடுக்கவில்லை. தமிழகத்தில் தமிழ் மொழி தெரியாமலேயே ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது.

மாநில மொழிகளில் பொறியியல், மருத்துவக் கல்வியை கொண்டு வரலாம் எனக் கூறிய பின்னரும் தமிழில் மருத்துவம், பொறியியல் கல்வியை ஏன் கொண்டு வரவில்லை? எம்ஜிஆர் நிறுவிய தமிழ் பல்கலைக்கழகத்திற்கு பின்னர் ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்படவில்லை? மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி இருப்பதால் மூச்சு முட்டுகிறது என முதலமைச்சர் கூறியுள்ளார், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தபோது மூச்சு முட்டவில்லையா?

தமிழை வளர்க்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது, தமிழக முதலமைச்சர் ஆங்கிலத்தை வளர்த்து வருகிறார், மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது.

தமிழிசை சௌந்தர்ராஜன்

ஆறு மாதத்திற்கு இந்த கேள்வி வேண்டாம்!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது, திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்.

"எந்த ஒரு கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் இருக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே" என்ற கேள்விக்கு "6 மாதத்திற்கு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து எந்த ஒரு கேள்வியையும் ஊடகத்தினர் கேட்க வேண்டாம், 6 மாதத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.

தமிழகத்திலிருந்து திமுக அப்புறப்படுத்த வேண்டிய கட்சி என தம்பி விஜய் கூறியுள்ளார், எங்களது நிலைப்பாடும் அதுதான்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் 2026-ல் திராவிட மாடல் அரசு நீக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக கால் பதித்து வருகிறது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் சேர்ந்து கால் பதிக்கும் என்பதை மத்திய தலைமை முடிவு செய்யும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'அரசியல் கோமாளி... நான் பதில் கூறுவதாக இல்லை' - அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து பதில் அளிக... மேலும் பார்க்க

'தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை' - அண்ணாமலை புது விளக்கம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் நேற்று பேசும்போது அதிமுக என்று எங்கேயும் சொல்லவில்லை. தொலைக்காட்சியில் வேலை இல்லாதவர்களை வைத்து விவாதம் நடத்துவதற்கு நா... மேலும் பார்க்க

பீகார் : யார் தலைமையில் தேர்தல்? - இந்தியா கூட்டணிக்குள் காங்கிரஸ் vs ஆர்.ஜே.டி யுத்தம்

பீகார் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதில் இந்தியா கூட்டணிக்குள் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.பீகார் தேர்தல்243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் Biography இப்போது Audio Formatல் - | Vikatan Play

‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது... மேலும் பார்க்க

"விஜய்யை பார்த்து பாஜக பயப்படுகிறது; அதிமுக-வுடன் கூட்டணியா?" - தவெக ராஜ்மோகன் பதில்

சமீபத்தில் இரண்டாமாண்டு துவக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாடியது த.வெ.க. இங்கு பூத் கமிட்டியை வலுவாக்க வேண்டும் என்பது உள்ளிட்டு பலவற்றை சுட்டிக்காட்டி பேசினார் அதன் தலைவர் விஜய். அவரின் உரை பேசுபொருளானத... மேலும் பார்க்க