செய்திகள் :

பான் மசாலா விளம்பர சர்ச்சை: ஷாருக், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

post image

பாலிவுட் நடிகர்கள் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் வந்தன. ஆனால் இது எங்களது தொழில் என்று சில நடிகர்கள் கூறிவிட்டனர். ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திரா என்பவர் அங்குள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் பான் மசாலாவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "பான் மசாலாவிற்காக செய்யப்படும் விளம்பரத்தில் பான்மசாலாவில் குங்குமப்பூவின் சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த பான்மசாலாவை தயாரிக்கும் ஜெ.பி.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். பொதுமக்கள் பான் மசாலாவை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. குங்குமப்பூ இருக்கும் குட்கா என்று கூறி விமல் பான் மசாலாவை மக்களை வாங்க வைக்கின்றனர். குங்குமப்பூ என்று கூறி விளம்பரப்படுத்துவதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.

உண்மையில் அது போன்ற எதுவும் பான்மசாலாவில் கிடையாது. குங்குமப்பூ ஒரு கிலோ 4 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஆனால் பான்மசாலா வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே குங்குமப்பூவை பான்மசாலாவில் கலப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இப்பான்மசாலா குறித்து தவறான தகவலை பரப்பி மக்களை ஏமாற்றும் பான்மசாலா விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பான்மசாலாவை தயாரிக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த தவறான விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தால், பொதுமக்கள் உயிர் மற்றும் உடல்நல இழப்பை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு மனுதாரர்கள் தனித்தனியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பாவார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். பொது மக்களின் நலனுக்காக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விளம்பரம் மற்றும் பான் மசாலாவை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். இம்மனுவை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷன் தலைவர் மீனா மற்றும் உறுப்பினர் ஹேம்லதா ஆகியோர் பான்மசாலா விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது தவிர ஜெ.பி.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்றும் அப்படி ஆஜராகவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 30 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை: ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்..!

மும்பையில் புறநகர் ரயில்கள் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயிலில் பயணிகள் ஏறி இறங்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் சில நொடிகள் மட்டுமே நிற்கும் ரயி... மேலும் பார்க்க

பி.எம்.டபிள்யூ காரை நடுரோட்டில் நிறுத்தி, சிறுநீர் கழித்த வாலிபர்... மது போதை காரணமா?

நாட்டில் வாகன நெருக்கடி அதிகமான நகரங்களில் புனேயும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகமுள்ள நகரமாக புனே விளங்குகிறது. புனேயில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருக... மேலும் பார்க்க

Chhaava: தங்க புதையலை தேடி மொகலாய மன்னன் கோட்டையில் குழி தோண்டிய மக்கள்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்!

சமீபத்தில் நடிகர் விக்கி கெளஷல் நடித்து வெளி வந்த சாவா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

``அரசியல், ரியல் எஸ்டேட் பேச இங்கு இடமில்லை..'' வைரலாகும் உணவகத்தின் அறிவிப்பு! -என்ன காரணம்?

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்களை நாம் தேடி போவதற்கான காரணமே, உணவைத் தாண்டி அங்கு அமர்ந்து பல விஷயங்கள் குறித்து உரையாடுவதுதான். டீக்கடையில் தான் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பல விஷயங்கள் குறி... மேலும் பார்க்க

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்ணின் திருமண தோற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாரம்பரியம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில், சித்ரா புருஷோத்தமன் என்ற பாடிபில்டர் தனது த... மேலும் பார்க்க

கோடியில் பரிசளித்து மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... எங்கே, ஏன் தெரியுமா?

மாமியாரின் 50-ஆவது பிறந்த நாளை மருமகள் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த ... மேலும் பார்க்க