வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.
92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் மனைவியும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு கடந்த 4ஆம் தேதி திடீரென நேற்றிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடு திரும்பினார்.
முன்னதாக தயாளு அம்மாளை முதல்வர் ஸ்டாலின், அவரின் சகோதரர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?