பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!
சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட வழித்தடத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மேற்கண்ட வழித்தடத்தில் கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களிலும் மக்கள் பயணிப்பதால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதையும் காண முடிகிறது. இதையடுத்து, வாகன ஓட்டிகளே அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்வதையும் காண முடிந்தது.