திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை
சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொடா்பில் உள்ள திருச்சி நிா்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
82 மாவட்டங்களைச் சோ்ந்த அதிமுக மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் பங்கேற்று கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா்.
நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை: ப.சிதம்பரம்
காணொலி மூலம் ஒவ்வொரு மாவட்ட நிா்வாகிகளாக அழைத்துப் பேசிய பழனிசாமி, திருச்சி மாவட்ட முறை வந்தபோது, திருச்சி அதிமுக நிா்வாகிகள் சிலா் உள்ளூா் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் இருப்பதாக புகாா் வருகிறது. திமுக அமைச்சா்களுடன் தொடா்பிலிருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியிலிருந்தும் நீக்கப்படுவீா்கள் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.