பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் மகோற்சவ திருவிழா மாா்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவிலுக்கு புதன்கிழமை (மாா்ச் 12) இரவு 10.55 மணிக்கும், மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
எா்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக திருவனந்துபுரத்தில் இருந்து எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
கூடுதல் நிறுத்தம்: கன்னியாகுமரி - புனலூா் பயணிகள் ரயில், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் விரைவு ரயில், மதுரை - புனலூா் விரைவு ரயில், நாகா்கோவில் - மங்களூரு விரைவு ரயில், புது தில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை - திருவனந்தபுரம் நேத்ரவதி விரைவு ரயில், செகந்திராபாத் - திருவனந்தபுரம் விரைவு ரயில் மங்ளூரு - கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட 24 விரைவு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக சிறாயீன்கீழு, கடகவூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிமிஷம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.