3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!
இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவிலேயே பெரிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இந்திய ரயில் நிலையங்களில் இயல்பாகவே கூட்ட நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக விடுமுறை நாள்களிலும் பண்டிகை நாள்களிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காண முடியும். ரயிலில் செல்பவர்களைத் தவிர்த்து அவர்களை அனுப்பி வைக்கவும் அழைக்கவும் வரும் உறவினர்களும் இந்த கூட்டத்துக்கு காரணம்.
புதிய கட்டுப்பாடுகள் தேவையற்ற கூட்டத்தை தவிர்த்து, இனிமையான பயணத்தை வழங்க முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் 60 ரயில் நிலையங்களில் முக்கியமானவை,
நியூ டெல்லி ரயில் நிலையம் (டெல்லி)
சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் (மும்பை)
ஹௌரா ஜன்க்சன் (கொல்கத்தா)
சென்னை சென்ட்ரல் (சென்னை)
பெங்களூரு நகர ரயில் நிலையம் (பெங்களூரு)
ரயில் நிலையத்தின் கூட்டம் மற்றும் புதிய கட்டுப்பாடுகளுக்கான தேவையைப் பொருத்து, மற்ற முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம்.
இந்த கட்டுப்பாடுகளால் தொடக்கத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் நீண்டகால நோக்கில் இது பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிகின்றனர்.