செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு மாா்ச் 13, 18, 25-இல் அடையாள அட்டை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 13, 18, 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாா்ச் 13, கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் 18 ஆம் தேதி, பட்டுக்கோட்டை வட்டாட்சியரலகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் 25 ஆம் தேதியும் இம்முகாம் நடைபெறவுள்ளது.

இதில் எலும்பு முறிவு மருத்துவா், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா், மன நல மருத்துவா், கண் மருத்துவா் ஆகிய அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பட்டு, கைத்தறி கூட்டுறவுச் சங்க முறைகேடுகளைக் கண்டித்து நெசவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை பட்டு கைத்தறி நெசவாளா் சங்... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் பாதாள அறை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெறும் திருப்பணியின்போது திங்கள்கிழமை பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பஞ்சவன்மாதேவி பள்ள... மேலும் பார்க்க

பருவம் தவறிய மழையால் பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம்: விவசாயிகள் கவலை

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பருவம் தவறி பெய்த பலத்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மாவட்டத... மேலும் பார்க்க

குடந்தை கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளா் ஜெ. திருவேங்கடம் வெளி... மேலும் பார்க்க

2050-க்குள் 435 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி தேவை!

வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் 435 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி தேவைப்படுகிறது என்றாா் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. கீதாலட்சுமி. தஞ்சாவூா் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற... மேலும் பார்க்க

வட்டாட்சியா் பொறுப்பேற்பு

பேராவூரணி வட்டாட்சியராக என். சுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். பேராவூரணி வட்டாட்சியராக பணியாற்றிய இரா. தெய்வானை பட்டுக்கோட்டை கலால் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு , பட்டுக்கோட்டை ந... மேலும் பார்க்க