செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கனமழை பெய்தது.

தொடா் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ன நிலை காணப்பட்டது.

ஆண்டிமடத்தில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும், இக... மேலும் பார்க்க

தமிழ்நாடு குடியரசு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு குடியரசுக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கும் மத... மேலும் பார்க்க

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவ ஸ்தலங்களில் மிகவும் பழைமை வாய்ந்ததும், சுற்றுலாத் த... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 392 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 392 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்

கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அரியலூா் மாவட... மேலும் பார்க்க

ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆண்டிமடம் அடுத்த... மேலும் பார்க்க