``சட்ட விரோதமக குடியேறும் பங்களாதேஷ் பிரஜைகள்; நாடு கடத்துவதில் சிக்கல்.." - உள்துறை இணையமைச்சர்
அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வருபவர்கள் வேலை தேடி மும்பைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அது போன்று சட்டவிரோதமாக வருபவர்களுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் அவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பங்களாதேஷ் பிரஜைகள் அதிக அளவில் கட்டுமானத்துறையில்தான் வேலை செய்கின்றனர்.
இப்பிரச்னை மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிரொலித்தது. மணிஷா செளதரி இது குறித்து சட்டமன்றத்தில் பேசுகையில், "ஸ்வக்கி, சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் டெலிவரி பாயாக அதிகமான பங்களாதேஷ் பிரஜைகள் வேலை செய்கின்றனர். மும்பையில் கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில் அதிகமான பங்களாதேஷ் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கதம், "மும்பையில் கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் பங்களாதேஷ் பிரஜைகளை பணியில் அமர்த்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமானப்பகுதியில் பங்களாதேஷ் பிரஜைகள் இருப்பது தெரிந்தால் அது குறித்து பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸாரும், தொழிலாளர் துறை அதிகாரிகளும் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திற்கு சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
அதோடு மாவட்ட பொறுப்பு அமைச்சர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அழைத்து இது தொடர்பாக பேசி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். அடுத்தகட்டமாக நவிமும்பை பில்டர்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். நடப்பு ஆண்டில் மட்டும் சட்டவிரோத பங்களாதேஷ் பிரஜைகள் 600 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கு வங்க ஆவணங்கள் இருக்கிறது. அவற்றை ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. எனவே நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க 80 பேர் வரை தங்கும் ஒரு முகாம் இருக்கிறது. அடுத்த கட்டமாக மிகப்பெரிய முகாம் இதற்காக கட்டப்படும்" என்று தெரிவித்தார். மும்பை போரிவலி பகுதியில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு இருப்பதாக பா.ஜ.க சஞ்சய் உபாதியா தெரிவித்துள்ளார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks