`Snickers தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்' - நண்பர்கள் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!
Snickers தீமில் சவப்பெட்டி வேண்டும் என்று விளையாட்டாக ஒருமுறை கேட்ட நபருக்கு, அவரது விருப்பப்படியே அடக்கம் நடந்துள்ளது.
வாழ்க்கை எல்லாருக்கும் நாம் நினைத்தபடி அமைவதில்லை. மரணமும் அப்படியே. ஆனால் பால் ப்ரூமே என்ற 55 நபருக்கு தான் நினைத்தபடியான இறுதிச்சடங்கு கிடைத்துள்ளது.
ப்ரூமே துல்லியமான டைமிங் காமடிகளுக்காக அவரது நண்பர்கள் வடடாரத்தில் பிரபலமானவர். அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

இறப்பதற்கு முன்பு ஸ்னிக்கர்ஸ் போன்ற சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படுவது பற்றி ஜோக்கடித்துள்ளார். செண்டிமெண்டாக அதையே இறுதி சடங்கில் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
அவரது நகைச்சுவை உணர்வு மிக்க ஆளுமையை பிரதிபலிக்கும் விதமாக, அந்த பெட்டியில் "I'm nuts" (நான் பைத்தியம்) என எழுதியுள்ளனர்.
இந்த சவப்பெட்டி குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன. பலரும் இந்த விசித்திரமான இறுதிச் சடங்கு குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அவரது குடும்பத்தினர், "பால் வாழ்க்கையில் அப்பட்டமான கதாப்பாத்திரமாக இருந்தவர், அவரை பிரதிபலிக்கும் விதமாக இந்த சடங்கு இருக்க வேண்டும்" என விளக்கம் அளித்துள்ளனர்.

அவரது தனித்துவத்தை பிரதிபலிக்கும் Snickers சவப்பெட்டியில், அவருக்கு விருப்பமான கிறிஸ்ட்டல் பாலஸ் கால்பந்து கிளப் லோகோவும் இடம் பெற்றுள்ளது.
பால் ப்ரூமேவின் இறுதிச்சடங்கில் அவரது நண்பர்கள் ஸ்பெஷலான டி - சர்ட் அணிந்து கலந்துகொண்டுள்ளனர். ஒரு மனிதனின் வாழ்க்கை அவரது இறுதி சடங்கில் வெளிப்படும் எனக் கூறுவார்கள், இந்த தனித்துவமான இறுதி சடங்கு பாலின் வாழ்க்கை நண்பர்களுடன் மகிழ்ச்சியானதாக இருந்திருக்கும் எனக் காட்டுகிறது!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
