செய்திகள் :

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

post image

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார்.

பிப்ரவரி 28, 2008 அன்று சந்தியா பாண்டே என்ற பெண்மணி, 'ஷி மெடிக்கல் கேர்' எனும் தனியார் மருத்துவமனையில் C-section அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குழந்தை பெற்றுள்ளார்.

C-section

இந்தியா டுடே தளத்தில், அந்த பெண்ணின் கணவர் அரவிந்த் குமார் பாண்டே அளித்துள்ள காவல்துறை புகாரில் அப்போதிருந்தே அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக ஏராளமான மருத்துவர்களை அணுகியும் சந்தியாவின் வயிற்று வலிக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

லக்னோ மருத்துவக் கல்லூரியில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதைக் கண்டறிந்ததும் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (KGMU) அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.

Surgical scissors

அங்கு மார்ச் 26ம் தேதி சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை வெளியில் எடுத்துள்ளனர்.

KGMU செய்தி தொடர்பாளர் சுதீர் சிங் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சை சவாலாக இருந்ததாகவும், வெற்றிகரமாக நிறைவுற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தியா பாண்டே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சந்தியா பாண்டேவின் நீண்ட நாள் வேதனைக்கு சிசேரியன் மேற்கொண்ட டாக்டர் புஷ்பா ஜெய்ஸ்வால் என்பவர்தான் காரணம் என அரவிந்த் குமார் பாண்டே தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க

UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால்... மேலும் பார்க்க

Ramalan: `அவர்கள் நமக்கும் நாம் அவர்களுக்கும் செய்கிறோம்' நல்லிணக்கம் காக்கும் ரமலான் நோன்புக் கஞ்சி

இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் பெரும்பகுதி முகாமிட்டிருந்தது வட இந்தியாவில்தான் என்பது வரலாறு சொல்லும் தகவல். அதனால்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை ஆண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால... மேலும் பார்க்க

5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக சாப்பிட முயன்று சிக்கிய Influencer; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயன்று மாட்டியதால், சாப்பிட்ட பஃபே சாப்பாட்டுக்கு 3,600 ரூபாய் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்... மேலும் பார்க்க

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... மேலும் பார்க்க

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க