செய்திகள் :

வக்ஃப் மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தொல் திருமாவளவன்

post image

திருச்சி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என தெரிவித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அரசின் வக்ஃப் மசோதாவை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்று சொல்ல கூடிய அளவுக்கு வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு நிறைவேற்றி உள்ளது. இது முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பாஜக அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றியுள்ளது.

வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களில் தலையிடாத மத்திய அரசு வஃக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு வெளிப்படை தன்மை என பாஜகவினர் கூறுகின்றனர்.

பௌத்த மதத்தில் புத்த விகாரில் பௌத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்த வருகின்றனர்.இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசின் இந்த மத விரோத போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வஃக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

மக்களவையில் மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையில் 95 பேரும் வாக்களித்துள்ளோம். தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த அனைத்துத் திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இதனை சாதித்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு!

கச்சத்தீவை மீட்க வேண்டும்

இந்த நிலையில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.

பிரதமர் மோடி இலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

இந்த சூழலில் 9 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும்.

திமுக அரசு பதவியேற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது. அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்கள் என கூறலாம்.

வேடிக்கையாக உள்ளது

விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் தான். தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.

நாட்டிலேயே தமிழகம் தான் பள்ளிக்கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால் அதற்கு உடனடியாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும்.

பெரிய சவுக்கடி

வஃக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிகாரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடி என திருமாவளவன் கூறினார்.

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன... மேலும் பார்க்க

யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்! அதிபர் டிரம்ப் பகிர்ந்த விடியோ!

யேமனின் ஹவுதி படையின் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.யேமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது மிகவும் அரிது என இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக அபாரமாக ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரின் 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானாவில் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டு அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்பட 86 ... மேலும் பார்க்க

"எங்களை சிறையில் தள்ளினாலும் ஊதிய முரண்பாடு குறையும் வரை போராடுவோம்"

சென்னை: எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு குறையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுடைய உயிரே போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோ... மேலும் பார்க்க

தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற உத்தரவிட்ட அமெரிக்கா!

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ர... மேலும் பார்க்க