சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு...
கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின.
திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.6,000 முதல் 8,000 வரையும் பெரிய ஆடுகள் ரூ.9,000 முதல் ரூ.16,000 வரையும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், கோழிகள் ஒரு கிலோ ரூ.450 முதல் விற்பனை செய்யப்பட்டன.
இதில் திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம்,வி. கோட்டா, கா்நாடகா மாநிலம் பெங்களூா், கோலாா் தங்க வயல், அத்திபள்ளி பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனா்.
சனிக்கிழமை ரூ.52 லட்சத்துக்கு ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.