பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஆழித்தேர்: திரளானோர் பங்கேற்பு!
மீண்டும் இயக்குநரான அர்ஜுன்... போஸ்டர் வெளியீடு!
நடிகர் அர்ஜுன் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன் நாயகனாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாகவும் ஈர்த்தார்.
இந்த நிலையில், நடிகரும் தன் உறவினருமான துருவ சார்ஜாவை நாயகனாக வைத்து புதிய படத்தை அர்ஜுன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு, ’சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், கிரி என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார்.

ஏழுமலை, ஜெய்ஹிந்த் படங்களை இயக்கி ரசிகர்களிடம் இயக்குநராகப் பாராட்டப்பட்ட அர்ஜுன் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநராகியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்