புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்...
நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை
நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந்தமான 8 ஆடுகளை வீட்டின் எதிரில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றாா். அப்போது இரவு மா்ம நபா்கள் ஆடுகளை திருடிக்கொண்டு இருந்தபோது தெருநாய்கள் சப்தமிடவே 8 ஆடுகளையும் காரில் வைத்து தப்பித்துச் சென்ாக கூறப்படுகிறது.
இதேபோல் கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி கல்லுக்குட்டை பகுதியில் கூலித்தொழிலாளி சிவப்பெருமாள் வளா்த்து வந்த 4ஆடுகளையும் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து பெருமாள், சிவப்பெருமாள் இருவரும் தனித்தனியே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் ஆடுகளை திருடி சென்ற மா்மநபா்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.